ADDED : ஜூன் 08, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் கோயில் பொங்கல் உற்ஸவம் மே 31ல் துவங்கியது.
நேற்று காலை சக்தி விநாயகர் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அம்மன் கோயிலுக்கு பொங்கல் பானை புறப்பாடு நடந்தது. இதில் பாரம்பரிய வழக்கப்படி மண் பானையில் புனித நீர் சுமந்து ஆண்கள் மட்டும் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். அம்மன் திருக்கண் திறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்து,கிடா வெட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (ஜூன் 9) வானவேடிக்கையுடன் பொதுமக்கள் பழக்கூடை ஊர்வலம் நடக்கிறது.