/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிடைத்தது பதவி; கிடைக்காதது நிம்மதி; பதவி உயர்ந்தும் பணி உயரலையே
/
கிடைத்தது பதவி; கிடைக்காதது நிம்மதி; பதவி உயர்ந்தும் பணி உயரலையே
கிடைத்தது பதவி; கிடைக்காதது நிம்மதி; பதவி உயர்ந்தும் பணி உயரலையே
கிடைத்தது பதவி; கிடைக்காதது நிம்மதி; பதவி உயர்ந்தும் பணி உயரலையே
ADDED : ஜூன் 15, 2024 06:26 AM
மதுரை : மதுரை நகர் போலீசில் ஏட்டுகள் சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்ற நிலையில் அதே வேலையில் சிலர் தொடர்கின்றனர். பதவி உயர்வு பெற்றும் மதிப்பில்லையே என போலீசார் புலம்புகின்றனர்.
மதுரை நகரில் இம்மாதம் 118 ஏட்டுகள் சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றனர். வழக்கமாக பதவி உயர்வு பெற்றவர்கள் வேறிடத்திற்கு இடமாற்றப்படுவர் அல்லது அதே பிரிவில் அடுத்த நிலைக்கு செல்வர். ஆனால் 118 பேரில் பெரும்பாலானோர் இன்னும் பழைய பணியையே தொடர்கின்றனர்.
உதாரணமாக அதிகாரிகளுக்கு டிரைவர்களாக இருப்பவர்கள், பதவி உயர்வுக்கு பின்பும் எஸ்.ஐ., சீருடையுடன் வாகனம் ஓட்டுகின்றனர். ஸ்டேஷனில் ஏட்டாக இருக்கும்போது செய்த பணியை 'எஸ்.எஸ்.ஐ.,' அந்தஸ்துடன் ஏட்டு வேலையையே தொடர்கின்றனர்.
ஆயுதப்படையில் பதவி உயர்வு பெற்ற 19 பேரில் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு பணிக்காக வெளியே சென்று வருகிறார்கள். மற்றவர்கள் டிரைவர், மாரியம்மன் கோயில் பணிகளை தொடர்கின்றனர்.
சிறப்பு எஸ்.ஐ.,க்குரிய பணியிடங்களை இவர்களையும், இவர்களிடத்தில் புதியவர்களையும் நியமிக்க வேண்டும். இந்த சுழற்சி முறை தொடர்ந்தால்தான் போலீஸ் துறையில் செயற்கையாக ஏற்படும் ஆள் பற்றாக்குறை தவிர்க்கப்படும். இதுகுறித்து கமிஷனர் லோகநாதன் பரிசீலிக்க வேண்டும்.