/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
/
ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 29, 2024 04:42 AM
திருமங்கலம், : ஊராட்சிகளில் 100 நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் கள்ளிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளிக்குடி ஒன்றியம் எம்.புளியங்குளம், தென்னமநல்லுார், குராயூர், மொச்சிகுளம், மாசவநத்தம், எஸ்.பி., நத்தம், மேலப்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலையை முறையாக வழங்குவது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், விவசாயிகள் சங்க செயலாளர் உமா மகேஸ்வரன் பங்கேற்றனர். பி.டி.ஓ., தங்கவேல், அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.