/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறுதானிய கருவிகளுக்கான யூனிட் அமைக்கிறீர்களா வேளாண் வணிகத் துறையின் 75 சதவீத மானியம் உண்டு
/
சிறுதானிய கருவிகளுக்கான யூனிட் அமைக்கிறீர்களா வேளாண் வணிகத் துறையின் 75 சதவீத மானியம் உண்டு
சிறுதானிய கருவிகளுக்கான யூனிட் அமைக்கிறீர்களா வேளாண் வணிகத் துறையின் 75 சதவீத மானியம் உண்டு
சிறுதானிய கருவிகளுக்கான யூனிட் அமைக்கிறீர்களா வேளாண் வணிகத் துறையின் 75 சதவீத மானியம் உண்டு
ADDED : ஜூன் 18, 2025 04:19 AM
மதுரை: ''சிறுதானியங்களை அறுவடை செய்தபின் சுத்தம் செய்வது, பேக்கிங் செய்வது உட்பட 9 வகையான கருவிகளை வாங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு (எப்.பி.ஓ.,) வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை மூலம் 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது'' என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.
வேளாண் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிறுதானிய திருவிழா நடந்தது. வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் வரவேற்றார்.
வேளாண், தோட்டக்கலை ஸ்டால்களை பார்வையிட்ட பின் கலெக்டர் பேசியதாவது: மனிதகுலத்திற்கு தேவையான தொழில் விவசாயம் தான்.
அதை லாபகரமான தொழிலாக மாற்றுவதே இன்று முக்கியத் தேவை. வேலைக்கு ஆட்கள் இல்லாத நிலையில், நிலத்தை பராமரிக்க முடியாமல் விவசாய நிலத்தை இழந்து வருகிறோம்.
தமிழக அரசு விவசாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவதால் சிறுதானிய பரப்பளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கம்பு, கேழ்வரகு, வரகு, தினை போன்ற சிறுதானியங்களை அறுவடைக்கு பின் சுத்தம் செய்வது கடினமான வேலை. அதற்கான இயந்திரங்கள் வந்து விட்டன.
விவசாயிகளாக ஒருங்கிணைந்து எப்.பி.ஓ., அமைத்தால் சிறுதானியங்களை சுத்தம் செய்வது, அரைப்பது, பேக்கிங் செய்வது உட்பட 9 வகையான கருவிகளை வாங்க வேளாண் வணிகத் துறை மூலம் அரசு வழிகாட்டுகிறது. ரூ.25 லட்சம் மதிப்புள்ள கருவிகளை வாங்கும் போது அதிகபட்சமாக 75 சதவீத மானியம் தரப்படுகிறது. திருமங்கலம் வாகைகுளத்தில் இம்முறையில் ஒரு எப்.பி.ஓ., நிறுவனத்திற்கு ரூ.18.75 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மதுரையில் வேறிடத்திலும் அமைக்க முன்வரலாம் என்றார்.
வேளாண் முன்னாள் கூடுதல் இயக்குநர் விவேகானந்தன், வேளாண், வேளாண் வணிக, விதை ஆய்வு துணை இயக்குநர்கள் ராணி, சாந்தி, மெர்சி ஜெயராணி, வாசுகி, உதவி இயக்குநர்கள் மீனாட்சிசுந்தரம், சிங்காரலீனா, திவ்யா, பரமேஸ்வரன், விற்பனை கூட ஒழுங்குமுறை செயலாளர் அம்சவேணி பங்கேற்றனர். விவசாய கல்லுாரி உதவி பேராசிரியர்கள் சம்பத்குமார், ஜோதிலட்சுமி, விவசாயிகள் சுப்புலட்சுமி, பெத்தக்காள், மூர்த்தி கருத்தரங்க அமர்வுகளில் பேசினர்.