/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முருக பக்தர்கள் மாநாட்டை கண்டு பலருக்கு அச்சம் பா.ஜ., பொதுச்செயலாளர் விமர்சனம்

ADDED : ஜூன் 21, 2025 12:26 AM
திருநகர்: 'முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் கூட்டத்தை பார்த்து பலர் அச்சப்படுகின்றனர்' என பா.ஜ., பொதுச் செயலாளர் சீனிவாசன் பேசினார்.
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் வைப்பதற்காக திருநகர் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை சார்பில் நிர்வாகிகள் சசிகுமார், சரவணன், அழகுசுந்தரம், முத்துராஜ், துரைசபின் ஆகியோர் பா.ஜ., பொதுச் செயலாளர் சீனிவாசனிடம் 4 அடி உயர பித்தளை வேல் வழங்கினர்.
சீனிவாசன் பேசியதாவது: மதுரை முருகபக்தர்கள் மாநாட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை பார்த்து பலர் அச்சப்படுகின்றனர். இது சங்கிகள் மாநாடு தடை செய்ய வேண்டும் என்கிறார் ஒருவர். நல்லிணக்கத்தை குலைக்கும் அதனால் மாநாடு நடத்தக் கூடாது என்கிறார் மற்றொருவர். இவர்களது எதிர்ப்பால் பொதுமக்கள் அதிகம் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு 5 லட்சம் பேர் கூடி கந்த சஷ்டி கவசம் கூறுவோம். இது கின்னஸ் சாதனை ஆகும். இது அரசியல் மாநாடு அல்ல. அரசியல் தீர்மானங்கள் இல்லை. அரசியல் கொடிகள் இல்லை. முருக பக்தர்கள் மாநாட்டை எதிர்ப்பவர்களே அதனை அரசியல் ஆக்குகின்றனர் என்றார்.