/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிட்டிஸ்போர்ட்ஸ் மாநில கூடைப்பந்தாட்ட போட்டி
/
சிட்டிஸ்போர்ட்ஸ் மாநில கூடைப்பந்தாட்ட போட்டி
ADDED : மே 27, 2025 01:06 AM
சோழவந்தான்: சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் சோழவந்தானில் மாநில கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
மே 23 தொடங்கிய போட்டியில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 21 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் சென்னை வி.கே. ஜெயராமன் - எஸ்.பி.ஓ.ஏ., அணிகள் மோதின. முதலிடத்தில் வெற்றி பெற்ற வி .கே. ஜெயராமன் அணி ரூ. 21 ஆயிரம், கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி.ஓ.ஏ., ரூ. 14 ஆயிரம், கோப்பை,3ம் இடம் பிடித்த வத்தலகுண்டு அணி 7 ஆயிரம், கோப்பை, 4ம் இடம் பிடித்த வடமதுரை அணி கோப்பையையும் வென்றது.பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் பரிசு வழங்கினார்.கூடைப்பந்தாட்ட கழக சேர்மன் மருது பாண்டியன், நிர்வாகி சந்தோஷ், செயலாளர் பங்காரு ராஜு, பொருளாளர் அபிராமி, ஏற்பாடுகளை செய்தனர்.