ADDED : மே 27, 2025 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அ.புதுப்பட்டியில் பி.டி.எஸ். ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோடைகால இலவச கபடி மற்றும் வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் ஞானவேல், செந்தில், பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். விளையாட்டு வீரர்கள், கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. முகாமினை கிளப் பயிற்சியாளர் வினோத்குமார் ஒருங்கிணைத்தார்.