/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அறுவடை துவங்கியதால் மாடு வளர்ப்போர் மகிழ்ச்சி
/
அறுவடை துவங்கியதால் மாடு வளர்ப்போர் மகிழ்ச்சி
ADDED : பிப் 06, 2024 12:37 AM
திருப்பரங்குன்றம்: நெல் அறுவடை செய்யப்படுவதால் வைக்கோல் அதிகளவில் கிடைக்கிறது. இதனால் மாடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தை சுற்றி வைகை அணை தண்ணீரால் நிரம்பும் கண்மாய்களும், மானாவாரி கண்மாயிலும் உள்ளன. இக்கண்மாய்கள் மூலம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்தாண்டு தாமதமாக பெய்த மழையால் கண்மாய்கள் தாமதமாக நிரம்பியது. மானாவாரி கண்மாய்களில் மட்டும் மழைநீர் நின்றது. அதனால் கண்மாய் தண்ணீர் பாசன விவசாயிகளில் பெரும்பாலானோர் நெல் நடவு செய்யவில்லை. மானாவாரி பகுதி நிலங்கள் ஆழ்குழாய், கிணறுகளில் தண்ணீர் இருந்த விவசாயிகள் ஏராளமானோர் நெல் நடவு செய்தனர்.
தற்போது அறுவடை துவங்கியுள்ளது. வைக்கோலும் அதிகளவில் கிடைக்கிறது. இது ஓராண்டுக்கு போதுமானதாகும். வெளி மாவட்டங்களில் வைக்கோல் வாங்கும் நிலை இந்த ஆண்டு இல்லை என மாடு வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.