/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோட்டில் கிரஷர் துாசி வாகன ஓட்டிகள் அவதி
/
ரோட்டில் கிரஷர் துாசி வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 16, 2025 04:35 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா, கச்சைகட்டி ரோட்டில் கிரஷர் துாசிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இந்த ரோட்டின் இருபுறமும் 8க்கும் மேற்பட்ட கிரஷர் கம்பெனிகள் உள்ளன. கல் உடைக்கும் போது வெளிப்படும் துாசி, ரோட்டை மறைக்கும் அளவு வருகிறது. இந்த பகுதியில் டூவீலரில் செல்வோர் கண்ணில் விழுகிறது. மேலும் துாசியால் 'டஸ்ட் அலர்ஜி' மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.
துாசி அதிகளவில் வெளியேறாத வண்ணம் கம்பெனிகளை சுற்றி பச்சை துணி, தகரம் அமைக்க வேண்டும். ஆனால் அது பெயரளவில் மட்டுமே உள்ளது. மேலும் இந்த ரோட்டில் சேறும், துாசியை அப்புறப்படுத்த, தண்ணீர் தெளிக்க என தனித்தனி வாகனங்கள் இருந்தும் அதை முறையாக பயன்படுத்துவதில்லை. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.