/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுப்பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரிப்பு
/
கழிவுப்பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரிப்பு
கழிவுப்பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரிப்பு
கழிவுப்பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரிப்பு
ADDED : செப் 16, 2025 04:35 AM

மதுரை: மதுரை சொக்கிகுளம் டி.வி.எஸ்., நிர்வாகத்தின் கல்பதரு வளாகத்தில், கழிவுப் பொருட்களில் இருந்து கலைபொருட்கள் தயாரிக்கும் தனித்துவமான போட்டி நடந்தது.
கழிவுகளை குறைத்து மறுசுழற்சி செய்தல், பொறுப்பான நுகர்வு, சூழலியல் வாழ்க்கை முறையை ஊக்குவித்தல், மாணவர்களிடையே படைப்பாற்றல் திறனை வளர்த்தல் ஆகியவை குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டி நடத்தப்பட்டது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என 3 பிரிவுகளில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிளாஸ்டிக், துணி, மின்னணுக் கழிவுகள், பழைய டூவீலர், கார் டயர் கழிவுகளைக் கொண்டு கலைப் பொருட்களை உருவாக்கினர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு நிர்வாகம் சார்பில் லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. மறுசுழற்சி, பசுமையான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வெற்றியாளர்களின் படைப்புகள் கல்பதரு வளாகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.