நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருமங்கலம் கோட்ட மாநாடு நடந்தது.
மாநில பொருளாளர் மகாலிங்கம் பேசினார். கோட்டச் செயலாளர் ராஜேந்திரன் செயல் அறிக்கை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தினகரன், மாவட்ட தலைவர்கள் முத்து ராமலிங்கம், கிருஷ்ணன் பேசினர்.
திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட், அதன் அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கட்டடங்கள், ஜவகர் 1வது தெருவில் உள்ள இருசக்கர வாகன காப்பகம், வேளாண் தொடக்க கூட்டுறவு வங்கி என அனைத்தையும் ஒருங்கிணைத்து வெளியூர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.