/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நேருக்கு நேர் விவாதிக்க அழைக்கிறார் உதயகுமார்
/
நேருக்கு நேர் விவாதிக்க அழைக்கிறார் உதயகுமார்
ADDED : மே 25, 2025 04:48 AM
சோழவந்தான் : 'முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு செய்த சாதனை திட்டங்களை என்னுடன் நேருக்கு நேராக விவாதிக்க தயாரா' என சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் சவால் விடுத்தார்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, சோழவந்தான் தொகுதி சார்பில் 1000 மூத்த உறுப்பினர்களுக்கு உதயகுமார் நேற்று பொற்கிழி வழங்கி பேசியதாவது:
2011 சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்று தமிழ்ச்சங்கம், குடிநீர் திட்டங்கள், சுற்றுச்சாலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை மதுரையில் செயல்படுத்தினோம். அந்த வரலாறு மீண்டும் திரும்புகிறது.
முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு செய்த சாதனை திட்டங்களை என்னுடன் நேருக்கு நேராக விவாதிக்க தயாரா.
இன்றைக்கு தி.மு.க., தொண்டர்களே, தி.மு.க., ஆட்சி தோற்றுப் போக வேண்டும் எனக் கூறுகின்றனர்.
மதுரையில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றிப் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.