/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டில் குவியும் குப்பை
/
எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டில் குவியும் குப்பை
ADDED : ஜூன் 28, 2025 12:23 AM

மதுரை:மதுரை எல்லீஸ்நகர் குடியிருப்பு பகுதியில் குவியும் குப்பையால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி வைகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் 192 வீடுகள் உள்ளன. இப்பகுதியின் மாநகராட்சி இடத்தில் பிற வார்டுகளில் சேரும் குப்பை கொட்டப்படுகிறது.
எல்லீஸ்நகர் பகுதியில் ஏற்கனவே சுகாதாரக் கேடு, கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்படும் நிலையில் தற்போது குப்பையால் மேலும் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று வேகமாக வீசும்போது இக்குவியலில் இருந்து வீடுகளுக்குள் கழிவுகள் பறந்து வருகின்றன. இப்பகுதியில் தான் 192 வீடுகளுக்கு குடிநீர் 'சம்ப்' உள்ளது. வீடுகளின் ஜன்னலை திறக்க முடியாத சூழல் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.