ADDED : ஜூன் 28, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து டிராபிக் இன்ஸ்பெக்டர் தங்கமணி பேசினார். மாணவர்கள் போதை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர்.
பள்ளியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் சென்று மீண்டும் பள்ளி வரை மாணவர்களின் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இன்ஸ்பெக்டர் அழகர், சப் இன்ஸ்பெக்டர்கள் பரமேஸ்வரி, பாண்டியராஜன் உட்பட போலீசார், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.