ADDED : அக் 04, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
தல்லாகுளம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. நகர் பகுதியில் ஆறு போல நீர் ஓடியதால், அனைத்து ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொன்மேனி, பைபாஸ் ரோடு பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேல் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் தவித்தனர்.

