நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருமங்கலம் கிரீன் டிரஸ்ட், தென்றல் அரிமா சங்கம், அன்ன வயல் அமைப்பு இணைந்து மரக்கன்றுகள், மற்றும் பனை விதைகள் நடும் விழா தொட்டியபட்டியில் கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் குழந்தைவேலு தலைமையில் நடந்தது.
ஓய்வு அலுவலர் நகை முகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர், தென்றல் அரிமா சங்க தலைவர் சசிகுமார், பட்டய தலைவர் செந்தில்நாதன், பொருளாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். பனை விதை நடவு தொழில்நுட்பம் குறித்து அன்னவயல் காளிமுத்து பேசினார். மரக்கன்றுகள், பனை விதைகள் ஏ.தொட்டியபட்டி, புதுப்பட்டியில் நடப்பட்டன. டிரஸ்ட் நிதி அறங்காவலர் கவிதா நன்றி கூறினார்.

