நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் மதுரை மேலாண்மை கல்லுாரியில் நடந்தது. நீதிபதி ராம் கிஷோர் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் ராஜநாயகம் முன்னிலை வகித்தார்.
உதவி பேராசிரியர் கணேஷ் பாண்டியன் வரவேற்றார். சட்டப்பணி ஆணைக் குழு வழக்கறிஞர்கள் முத்துமணி, அரிச்சந்திரன், விஜயகுமார், சீனிவாசன், தயாநிதி, எஸ்.ஐ., கஜேந்திரன் குழுவின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கினர். உதவி பேராசிரியர் கீர்த்தி சோபனா நன்றி கூறினார்.