ADDED : செப் 18, 2025 05:25 AM

வாடிப்பட்டி : துவரிமான் அருகே மேலமாத்துாரில் பதித்துள்ள குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.
வைகை அணையில் இருந்து குழாய்கள் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான குழாய்கள் மேலக்கால், கொடிமங்கலம், மேலமாத்துார், துவரிமான் வழியாக வைகை ஆற்றை ஒட்டிய ரோட்டோரம் செல்கிறது. இக்குழாய்களில் ஏற்படும் உடைப்பில் இருந்து நாள் முழுவதும் தண்ணீர் வெளியேறி வருகிறது.
மேலமாத்துார் காமாட்சிபுரம் பிரிவு எதிரே ரோடு, குடிசை வீடுகளுக்கு இடையே மாதக் கணக்கில் குடிநீர் வெளியேறி வைகை ஆறு, தோப்பு பகுதிக்கு செல்கிறது. கொடிமங்கலம் மயானம், கீழமாத்துார், துவரிமான் என பல்வேறு இடங்களில் குழாய் உடைப்புகள் உள்ளன. உடைந்த குழாயை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.