/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விலை சரிவால் உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்
/
விலை சரிவால் உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்
விலை சரிவால் உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்
விலை சரிவால் உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்
ADDED : ஜன 17, 2024 07:05 AM
பேரையூர் : நோய் தாக்குதல் மற்றும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, வெங்காய விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பேரையூர் பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தவக்காய் நோய் தாக்கியதால் வெங்காய விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. நோயால் பாதித்த பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்யாமல் உழவடை செய்து வருகின்றனர். சில விவசாயிகளே அறுவடை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெங்காயம் விலை சரிவை சந்தித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, கிலோ ரூ.100 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது மிகமிக குறைவாக ரூ.15க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'விதை வெங்காயம் கிலோ ரூ.80 க்கு வாங்கினோம். விதைப்பு முதல் அறுவடை வரை, சின்ன வெங்காயம் சாகுபடிக்கு ரூ. ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகிறது.
விதைக்கும் போது, ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 க்கு விற்றது. தற்போது ரூ.15 க்கு கொள்முதலாவதால் ரூ.80 ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது'' என்றனர்.

