நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரியில் படித்த மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு அர்ஜூனா விருது கிடைத்ததை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
பிரேசிலில் 2021ல் நடந்த 24வது கோடைக்கால 'டெப்லிம்பிக்ஸில்' எனப்படும் காது கேளாத, வாய் பேசாதோருக்கான சர்வதேச போட்டியில் ஜெர்லின் அனிகா 3 தங்க பதக்கங்களை வென்றார். தாய்லாந்து ஆசிய பசிபிக் பாட்மின்டன் போட்டியில் 6 தங்கம் வென்றார். 2023 பிரேசிலில் நடந்த உலக டெப் பாட்மின்டன் போட்டியில் பதக்கம் வென்றார். இவரது சாதனைகளை பாராட்டி மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவப்படுத்தியது.
இவரை ஊக்குவிக்கும் வகையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ ரூ.ஒரு லட்சம் வழங்கினார். உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தா மீனா, ஹேமலதா வாழ்த்தினர்.

