/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் புதிய மேம்பாலத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆய்வு
/
பள்ளிப்பாளையம் புதிய மேம்பாலத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆய்வு
பள்ளிப்பாளையம் புதிய மேம்பாலத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆய்வு
பள்ளிப்பாளையம் புதிய மேம்பாலத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூன் 01, 2025 01:08 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் அவசர கதியில் திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், 424.38 கோடி ரூபாய் மதிப்பில், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் ஆலாம்பாளையத்தில் இருந்து ஒன்பதாம்படி பகுதி வரை, மூன்று கி.மீ., துாரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
கடந்த, 29ல் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, முதல்வர் ஸ்டாலின் காணொலியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ஆனால், 'திறக்கப்பட்ட மேம்பாலத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பக்கவாட்டு சுவரில் கான்கிரீட் தளம் பெயர்ந்து வருகிறது. மேலும், மேம்பாலத்திற்கு முழுமையாக வர்ணம் பூசவில்லை. இதையெல்லாம் சீரமைக்காமலேயே, அவசர கதியில் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது' என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, மேம்பாலத்தை ஆய்வு செய்தார். பின், அங்கிருந்த பணியாளர்களிடம் பாலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், சங்ககிரி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், பாலத்தில் ஒரு வழிப்பாதையாக செல்கின்றன. அதை இரு வழிப்பாதையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.