/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூன் 01, 2025 01:08 AM
நாமக்கல், சேந்தமங்கலம் டவுன் பஞ்., த.வெ.க., பொருளாளர் வினோத்குமார் அக்கட்சியில் இருந்து விலகினார். அதேபோல், நா.த.க., நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், சிவக்குமார் ஆகியோரும், அக்கட்சியில் இருந்து விலகினர்.
இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் முன்னிலையில், த.வெ.க., பொருளாளர் வினோத்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் இணைந்தனர். தொகுதி பொறுப்பாளர் பிரியதர்ஷினி, எம்.எல்.ஏ., பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், டவுன் பஞ்., செயலாளர் தனபால், மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.