/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நவீன வேளாண் தொழில் நுட்பம் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
/
நவீன வேளாண் தொழில் நுட்பம் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
நவீன வேளாண் தொழில் நுட்பம் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
நவீன வேளாண் தொழில் நுட்பம் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 16, 2024 01:41 AM
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், வேளாண்துறை மூலம் செயல்-பட்டு வரும் வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், 'கலாஜாதா' என்ற கலை நிகழ்ச்சி மூலம், வேளாண் சார்ந்த நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.பாரதி கிராமிய கலைக்குழு சார்பில் நடந்த, 'கலாஜாதா' என்ற நிகழ்ச்சியின் போது, விவசாயிகளுக்கு, 'அட்மா' திட்டத்தில், விவ-சாய தொழில் நுட்ப பயிற்சி, விவசாயிகள் செயல்விளக்க திடல் அமைத்தல், பண்ணைப்பள்ளி மூலம் விதை முதல் அறுவடை வரை நடைபெறும் அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்து விளக்-கப்பட்டது.மேலும், வேளாண் துறை மானிய திட்டங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், பயிர் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் கவுரவ நிதி திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்-பட்டது.
ஏற்பாடுகளை, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கவிசங்கர், ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.