/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருங்கரட்டில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அதிகாரிகள் ஆய்வு
/
கருங்கரட்டில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அதிகாரிகள் ஆய்வு
கருங்கரட்டில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அதிகாரிகள் ஆய்வு
கருங்கரட்டில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அதிகாரிகள் ஆய்வு
ADDED : பிப் 24, 2024 03:21 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, கருங்கரட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மைதானம் அமைக்கப்பட்டுள்ள இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
எருமப்பட்டி அருகே, போடிநாய்க்கன்பட்டி பஞ்., பெருமாள் கோவில் அருகே உள்ள கருங்கரட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு, காளைகள் செல்லும் பாதை, பார்வையாளர்கள் நின்று பார்க்கும் அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு மைதானம் தாயர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நடராஜன், தாசில்தார் சீனிவாசன், டி.எஸ்.பி., தனபால், ஆய்வாளர் சுமதி ஆகியோர் பார்வையிட்டனர். தாசில்தார் சீனிவாசன், ''ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறு சிறு பணிகள் மாற்றப்பட்ட உள்ளன. இப்பணிகள் முடிந்ததும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்படும்,'' என்றார்.