/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்சாரம் தாக்கி மூன்று பேர் படுகாயம்
/
மின்சாரம் தாக்கி மூன்று பேர் படுகாயம்
ADDED : மே 28, 2025 01:10 AM
திருச்செங்கோடு,திருச்செங்கோடு அருகே, மொட்டை மாடியில் மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கியதில், மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
திருச்செங்கோடு, சட்டையம்புதுாரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி காயத்ரி. இவர்களது மகன் சவுந்தர்ராஜன், 20, டிபார்மென்ட் ஸ்டோரில் பணிபுரிகிறார். மகள் சந்தியா, 17, பிளஸ் 2 முடித்துள்ளார். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரெஜியா, 17, அட்டை கம்பெனியில் பணிபுரிகிறார். பாட்டி ஜான்பீர் பாதுகாப்பில் வசித்து வருகிறார். இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு 7:30 மணியளவில் சவுந்தர் வீட்டின் மூன்றாவது மொட்டை மாடியில், மொபைல்போனில் பேசியபடியே உட்கார்ந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சவுந்தர் கையை துாக்கி விளையாடியதாகவும், அப்போது மாடிக்கு அருகில் சென்று கொண்டிருத்த டிரான்ஸ்பார்மரில் இருந்து வரும் உயர் அழுத்த மின்சார கம்பியில் கைபட்டு, மின்சாரம் தாக்கியதால் அருகில் இருந்த இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் சவுந்தருக்கு வலது மணிக்கட்டு எரிந்ததுடன், எலும்பு முறிவும், வலது கை கால்களில் மின்சாரம் தாக்கி தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. ரெஜியாவிற்கு இடது காது கருகியும், உடலில் மின்சாரம் பாய்ந்து சுயநினைவு இல்லாமலும் உள்ளார். சந்தியா சற்று தொலைவில் இருந்ததால் இடது காலின் முட்டி தொடை அருகில், லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி மூன்று பேர் காயமடைந்தது, இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

