/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் கழிவு சேகரிப்பாளர் சுய விபர பதிவு முகாம் துவக்கம்
/
நாமக்கல்லில் கழிவு சேகரிப்பாளர் சுய விபர பதிவு முகாம் துவக்கம்
நாமக்கல்லில் கழிவு சேகரிப்பாளர் சுய விபர பதிவு முகாம் துவக்கம்
நாமக்கல்லில் கழிவு சேகரிப்பாளர் சுய விபர பதிவு முகாம் துவக்கம்
ADDED : மே 28, 2025 01:10 AM
நாமக்கல், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும், 'நமஸ்தே' என்பது, மத்திய அரசின் தேசிய இயந்திரமயம் செய்யப்பட்ட, சுகாதார மேலாண்மை நடவடிக்கை திட்டம். இத்திட்டத்தின் கீழ், கழிவு பொருட்கள் சேகரிப்பவர்களை கணக்கெடுக்கும் பணி, நாமக்கல் மாநகராட்சியில் நேற்று துவங்கியது.
மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் தெருக்களில், குப்பை குவியும் இடங்களில், நிலப்பரப்புகளில் அல்லது குப்பை அகற்றும்
இடங்களில் கழிவு திரட்டும் பணியாளர்கள், கழிவுகளை வகைப்படுத்தும் பணியாளர்கள் அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கூட்டாளிகள் பொருட்கள் மீட்பு மையம் மறுசுழற்சி மற்றும் பழுது பார்ப்பு மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள். வீடு வீடாக சென்று கழிவுகள் வாங்கும் வியாபாரிகள் என, இவ்வகை பணிகளில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருத்தல் அவசியம்.
இந்த பணியாளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். தொழில் சார் பாதுகாப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். இந்த 'நமஸ்தே' திட்டத்தில், நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், 334 பேர், தெருக்களில்
கழிவுகளை சேகரிப்பாளர், 55 பேர் கணக்கெடுக்கப்பட உள்ளனர். இந்த கணக்கெடுப்பு பணி ஜூன், 2 வரை மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் தன் சுய விபரங்களை பதிவு செய்ய தெருக்களில் கழிவுகளை சேகரிப்பவர்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 95665 29197 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, கமிஷனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

