/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பால் அவதி
/
விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பால் அவதி
விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பால் அவதி
விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பால் அவதி
ADDED : செப் 29, 2025 02:22 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம், ஒன்பதாம்படி பகுதியில், கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஈரோடு பகுதியில் இருந்து பள்ளிப்பாளையம் பகுதிக்கு வரும் பஸ், கார், லாரி, டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள், இந்த ஒன்பதாம்படி பகுதி வழியாக பள்ளிப்பாளையம் பகுதிக்கு செல்லும்.
சாலை விரிவுபடுத்தப்பட்ட பின், வாகனங்கள் சீராக சென்று வந்தன. ஓரிரு மாதங்களாக ஒன்பதாம்படி பகுதியில் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதே நிலையில் இருந்தால், ஆக்கிரமிப்பு அதிகரித்து சாலையின் மையப்பகுதி வரை வந்து விடும்.
ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பள்ளிப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.