/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெட்ரோல் குண்டு வீச்சு இளைஞர் ஒருவர் கைது
/
பெட்ரோல் குண்டு வீச்சு இளைஞர் ஒருவர் கைது
ADDED : ஜூலை 03, 2025 01:50 AM
குளித்தலை, மது போதையில், இளைஞர்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை அடுத்த. தரகம்பட்டி காமன்கோவில் தெருவை சேர்ந்த இளைஞர் மகேஸ்வரன் மற்றும் ரமேஷ். இருவரும் நண்பர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக, இருவரும் மது போதையில் நேற்று முன்தினம் மாலை சண்டையிட்டு கொண்டனர். அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இரவில், மகேஸ்வரன் ஆஸ்பிட்டாஸ் சீட் வீட்டில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார். இரவு 11:00 மணிக்கு மேல் அதிக மது போதையில், இரண்டு பீர் பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி மகேஸ்வரன் வீட்டின் மேல், முன்புறம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை தீயை பற்ற வைத்து போட்டு விட்டு ரமேஷ் தப்பினார்.
சத்தம் கேட்டு எழுந்த மகேஸ்வரன் குடும்பத்தினர், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாமணிபட்டி போலீசார், பெட்ரோல் பாட்டில் வீசிய ரமேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.