/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் கம்பம் மாற்றியமைப்பு டவுன் பஞ்., தலைவர் ஆய்வு
/
மின் கம்பம் மாற்றியமைப்பு டவுன் பஞ்., தலைவர் ஆய்வு
மின் கம்பம் மாற்றியமைப்பு டவுன் பஞ்., தலைவர் ஆய்வு
மின் கம்பம் மாற்றியமைப்பு டவுன் பஞ்., தலைவர் ஆய்வு
ADDED : ஜூலை 03, 2025 01:50 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட, மூன்றாவது வார்டில் கலைவாணர் தெரு அமைந்துள்ளது. இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வோர், தமிழ்நாடு மெடிக்கல் பின்புறம் உள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர் இச்சாலையில் சைக்கிளில் சென்று வருகின்றனர். ஆனால், சாலை நடுவே மின்கம்பம் அமைந்திருந்ததால், எதிரே வாகனங்கள் வரும்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை இருந்தது.
இந்நிலையில் இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்த, அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பில், மின்வாரிய ஊழியர்கள் சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தை, ஓரமாக மாற்றி அமைத்து கொடுத்தனர். இதை அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன் நேரில் ஆய்வு செய்தார். தி.மு.க., செயலாளர் பிரபாகரன் உடனிருந்தார்.