/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் திருடிய வாலிபர் சிக்கினார்
/
டூவீலர் திருடிய வாலிபர் சிக்கினார்
ADDED : ஜூன் 21, 2025 01:31 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரை சேர்ந்தவர் குழந்தைவேல், 53; விவசாயி. இவர் விவசாய தோட்டத்தில், சில நாட்களுக்கு முன், 'டி.வி.எஸ் எக்ஸல்' டூவீலரை நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். மீண்டும் வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து புகார்படி, ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த நபர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை சுற்றி வளைத்த போலீசார் விசாரித்ததில், மோகனுார் அருகே, செங்கப்பள்ளியை சேர்ந்த செல்வராஜ் மகன் முகேஷ்குமார், 20, என்பதும், குழந்தைவேலின் டூவீலரை திருடியதும் தெரியவந்தது. ஜேடர்பாளையம் போலீசார், முகேஷ் குமாரை கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

