/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.58.70 லட்சம் பக்தர்கள் காணிக்கை
/
ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.58.70 லட்சம் பக்தர்கள் காணிக்கை
ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.58.70 லட்சம் பக்தர்கள் காணிக்கை
ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.58.70 லட்சம் பக்தர்கள் காணிக்கை
ADDED : ஜூன் 21, 2025 01:30 AM
நாமக்கல், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் கோவில் உண்டியல்களை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று மூன்று கோவில்களில் உள்ள, 12 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அவை, ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில்
வைத்து எண்ணும் பணி காலை, 10:00 மணிக்கு தொடங்கி, இரவு, 8:00 மணி வரை நடந்தது.பவாணி, சங்மேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் அருள்முருகன் முன்னிலையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லுாரி மாணவ, மாணவியர் காணிக்கை தொகை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 58 லட்சத்து, 70,815 ரூபாய் ரொக்கம், 68 கிராம் தங்கம், 392 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.