/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து 19வது ஆண்டு துவக்க விழாவுக்கு ஏற்பாடு
/
நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து 19வது ஆண்டு துவக்க விழாவுக்கு ஏற்பாடு
நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து 19வது ஆண்டு துவக்க விழாவுக்கு ஏற்பாடு
நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து 19வது ஆண்டு துவக்க விழாவுக்கு ஏற்பாடு
ADDED : ஜூலை 14, 2024 11:37 PM

குன்னுார்;ஊட்டி மலை ரயிலுக்கு பாரம்பரிய அந்தஸ்து கிடைத்து இன்று, 19வது ஆண்டு துவங்குகிறது.
நீலகிரி மலை ரயில் இயக்கம், 1899ல் மேட்டுப்பாளையம்- குன்னுார் இடையே துவங்கியது. தொடர்ந்து, 1908ல் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது. இது, 46 கி.மீ., துாரத்தில் ஆசியாவில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாக உள்ளது.
மேட்டுப்பாளையம்- குன்னுார் இடையே செங்குத்தான சாய்வு பாதையில் 'ரேக் பார்' மற்றும் ரயிலில் பினியன் பிடிப்பான் கொண்ட 'ஆல்டர்நெட் பைட்டிங் சிஸ்டம்' முறையில் இயக்குகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைப்பகுதிக்கு வரும்போது இன்ஜின் ரயிலை தள்ளிக்கொண்டு வருகிறது. தாழ்வான பகுதிக்கு செல்லும் போது ரயிலை அதிவேகத்தில் செல்லாமல் இந்த ரேக்பார் தடுத்து இயக்குகிறது.
ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் இயங்கி வந்த நீராவி இன்ஜின்கள், தற்போது பர்னஸ் ஆயில் மற்றும் டீசல் மூலம் இயங்குகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மலை ரயிலுக்கு கடந்த, 2005ம் ஆண்டு ஜூலை, 15ம் தேதி யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து கிடைத்தது.
இதன். 19ம் ஆண்டு துவக்க விழா, நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில், இன்று குன்னுாரில் கொண்டாடப்படுகிறது.
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நடராஜன் கூறியதாவது:
கடந்த, 1997ம் ஆண்டு, ஊட்டி - ரன்னிமேடு வரை இயக்கிய மலை ரயிலில் பயணம் செய்த, ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைகழக பேராசிரியர் ராபர்ட் லீ என்பவரின் வழிகாட்டுதலின்படி, பாரம்பரிய அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
கடந்த, 2005ம் ஆண்டு பாரம்பரிய அந்தஸ்து கிடைக்க பலரும் காரணமாக இருந்தனர். அப்போது, நீலகிரி மலை ரயில் பாலக்காடு டிவிஷனில் கோட்ட பொது மேலாளர் எஸ்.கே. சர்மா மிகவும் உதவி செய்தார். அவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், நிகழ்ச்சி அவருக்கு மலர் அஞ்சலி செலுத்த உள்ளோம்,''என்றார்.