/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கணிதம் கற்றால் மூளை திறன் கூர்மையாகும்' அறிவியல் கருத்தரங்கில் தகவல்
/
'கணிதம் கற்றால் மூளை திறன் கூர்மையாகும்' அறிவியல் கருத்தரங்கில் தகவல்
'கணிதம் கற்றால் மூளை திறன் கூர்மையாகும்' அறிவியல் கருத்தரங்கில் தகவல்
'கணிதம் கற்றால் மூளை திறன் கூர்மையாகும்' அறிவியல் கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜூலை 14, 2024 11:36 PM

குன்னுார்;குன்னுார் அருகே உபதலை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் சார்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
தலைமையாசிரியர் ரெஜின், தலைமையாசிரியை உஷா தேவி தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜு பேசியதாவது:
மனித மூளை அனைத்தும் கணித சூத்திரத்தின் அடிப்படையில் செயல்படுவதை கணித மேதைகள் கணித்துள்ளனர். இதன் அடிப்படையில் மூளையை ஆதாரமாக கொண்டு நவீன 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை செயல்படுகிறது.
நியூரான்களுக்கு இடையே பாயும் மின்சாரத்தை என்சைன்கள் எனும் வேதிப்பொருட்கள் கட்டுப்படுத்துவதன் மூலம், மூளை மற்றும் மனிதனின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தலாம் என நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது.
'ஸ்கீசோ பெர்னியா' எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் மூளையின் செயல்பாடுகளை சிலிக்கான் துகள்கள் மூலம் கட்டுப்படுத்தலாம் என கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை செயற்கையாக உருவாக்கப்பட்ட தாயின் கருவறையில் வைத்து குழந்தைகளை பத்து மாதம் வரை இயல்பாக பிறக்கும் வழிவகை அறிவியலும் கண்டறியப்பட்டுள்ளது.
தற்காலத்தில் பொருளாதாரம் அறிவு சார்ந்த துறையாக உள்ளதால், நவீன யுகத்தில் மூளையை பயன்படுத்துவோர் தான் செல்வம் அதிகம் குவிக்கின்றனர். உடல் உழைப்பிற்கு உரிய சம்பளம் கிடைப்பதில்லை. மூளையின் செயல்பாடுகளை கூர்மையாக பயன்படுத்த முக்கியமானது கணித பயிற்சி. கணிதத்தை ஆர்வமுடன் கற்று கொண்டால் மூளையின் செயல்பாடுகளை கூர்மைப்படுத்தலாம். அறிவுத்திறனை மாணவர்கள் பெருக்கிக் கொண்டால் செல்வம், பதவியும் நம்மை தாமாக தேடி வரும். இவ்வாறு ராஜூ பேசினார். முன்னதாக ஆசிரியர் பிரகாசம் வரவேற்றார் ஆசிரியை சவுந்தர்யா நன்றி கூறினார்.