/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு கலை கல்லுாரி மாணவர்களுக்கு கலந்தாய்வு
/
அரசு கலை கல்லுாரி மாணவர்களுக்கு கலந்தாய்வு
ADDED : ஜூன் 27, 2024 09:24 PM
ஊட்டி : ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி வெளியிட்டுள்ள செய்து குறிப்பு:
ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் முடிந்துள்ள நிலையில், சில துறைகளில் மட்டும் இன சுழற்சி அடிப்படையில், சில இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. பல துறைகளில் இணைய வழியாக விண்ணப்பித்து கலந்து கொள்ளாத மாணவர்கள் மற்றும் கலந்தாய்வில் கலந்து இடம் கிடைக்காத மாணவர்கள் வரும், 28ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை நடக்கும் கலந்தாய்வில் பங்கு பெறலாம்.
இணையத்தில் விண்ணப்பித்து இதுவரை கலந்தாய்வுக்கு அழைக்கப்படாதவர்கள் அதற்கான இன சுழற்சி அடிப்படையில், மாணவர்கள் பங்கேற்கலாம்.
கட்டண விகிதம்:
மாநில பாடத்திட்டம்4,500 ரூபாய். இதர பாடத்திட்டம், 5,000 ரூபாய்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் அசல், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ் அசல், ஆதார் அட்டை அசல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்கம் மற்றும் ரேஷன் கார்டு அசல் ஆகியவற்றை, 6 நகல் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.