/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக்' பாட்டிலை பயணிகள் தவிர்க்க வேண்டும்
/
'பிளாஸ்டிக்' பாட்டிலை பயணிகள் தவிர்க்க வேண்டும்
ADDED : ஜூன் 27, 2024 09:24 PM
ஊட்டி : 'ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், ஸ்பூன், ஸ்ட்ரா, முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் தோரணங்கள், கொடிகள் உள்ளிட்ட , 21 வகையான பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. தவிர, ஒரு லிட்டர் 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களை உள்ளாட்சி நிர்வாகம் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையில் தமிழக--கேரள எல்லையை ஒட்டியுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். ஆனால், தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்களை கொண்டு வரும் சுற்றுலா பயணிகளிடம் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
அவர்களிடம் நீலகிரியில் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில்,'மாநில எல்லையில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, தனியார் மற்றும் அரசு பஸ்களில் மறைத்து குடிநீர் பாட்டில்களை கொண்டு வருவது அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்களை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.