/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டுறவு பண்ணையில் முப்பெரும் விழா கோலாகலம் பயனாளிகளுக்கு கடனுதவி ஆணை
/
கூட்டுறவு பண்ணையில் முப்பெரும் விழா கோலாகலம் பயனாளிகளுக்கு கடனுதவி ஆணை
கூட்டுறவு பண்ணையில் முப்பெரும் விழா கோலாகலம் பயனாளிகளுக்கு கடனுதவி ஆணை
கூட்டுறவு பண்ணையில் முப்பெரும் விழா கோலாகலம் பயனாளிகளுக்கு கடனுதவி ஆணை
ADDED : ஜூன் 29, 2024 02:00 AM
கோத்தகிரி:;'கோத்தகிரி தெங்குமரடா கூட்டுறவு பண்ணை சங்கத்தில், கல்வி திட்ட உறுப்பினர்களுக்கு சிறப்பு வைப்புத் தொகை சேமிப்பு முகாம், கடன் மேளா மற்றும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா,' என, முப்பெரும் விழா நடந்தது.
நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் தயாளன் தலைமையேற்று உறுப்பினர்களின் பங்கு தொகை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில், 110 மகளிருக்கு மகளிர் உரிமை தொகையாக, ஒரு லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய், இரண்டு மகளிர் குழுக்களுக்கு, 6 லட்சம் ரூபாய் கடனுதவிக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.
மேலும், பிரதமமந்திரி வீட்டு வசதிக் திட்டத்தில், மூன்று பயனாளிகளுக்கு, 75 ஆயிரம் ரூபாய் தவணைத்தொகை, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 'மைக்ரோ ஏடிஎம்' மூலமாக வழங்கப்பட்டது.
100 நாள் வேலை திட்ட பயனாளிகள், பத்து பேருக்கு, மைக்ரோ 'ஏடிஎம்' மூலமாக, 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 'ஆரா பயோ டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம், 204 தென்னை மரக்கன்றுகள் தெங்குமரஹாடா கூட்டுறவு பண்ணை சங்கத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த உறுப்பினர் கல்வித் திட்டத்தில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணை பதிவாளர் அய்யனார், கூட்டுறவு சங்கங்களின் ஊட்டி சரக துணைப்பதிவாளர் மது, ஆராபயோ டெக்னாலஜி நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் பழனிமுத்து அண்ணாமலை, மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டுறவு பண்ணை சங்க உறுப்பினர் ஜனார்த்தனன் நன்றி கூறினார்.