/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 29, 2024 02:01 AM
கோத்தகிரி;கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். எஸ்.ஐ.,கள் யாதவ் கிருஷ்ணன் மற்றும் வனக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் துவங்கிய பேரணியானது, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, காந்தி மைதானத்தை அடைந்தது.
பேரணியில், 'கஞ்சா, சாராயம், புகையிலை உள்ளிட்ட மதுவகைகளை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பதாகைகள் ஏந்தி , பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணம் குறித்து, விவாதிக்கப்பட்டது.
போலீசார் கூறுகையில், 'மாணவர்கள் தங்களது பெற்றோர், உறவினர்கள் நண்பர்களுக்கு, போதைப்பொருட்களின் தீமை குறித்து எடுத்துக் கூற வேண்டும். தவிர, போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க, மாணவர்கள் முன்வர வேண்டும்,' என்றனர்.