/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணற்றில் விழுந்த மாடு; கயிறு கட்டி மீட்ட மக்கள்
/
கிணற்றில் விழுந்த மாடு; கயிறு கட்டி மீட்ட மக்கள்
ADDED : ஜூலை 11, 2024 10:33 PM

பந்தலுார் : பந்தலுார் இரும்புபாலம் பகுதியில் சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்காக, சமன்படுத்தப்பட்ட பகுதியில் தரை தளத்தில் பயன்படுத்தாத கிணறு ஒன்று அமைந்துள்ளது.
இந்த வழியாக மேய்ச்சலில் ஈடுபட்ட மாடு தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. இது குறித்த தகவல் அறிந்த கால்நடை டாக்டர் பாலாஜி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து, பசுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதில் ஒருவர் கிணற்றிற்குள் இறங்கி மாட்டின் இடுப்பில் கயிற்றை கட்டி, மேலே நின்றிருந்தவர்கள் உதவியுடன் பசுவை மீட்டனர். தொடர்ந்து பசுவை அதன் உரிமையாளர் அங்கிருந்து அழைத்து சென்றார். மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில் இந்த கிணற்றை மூட வேண்டும்,' என்றனர்.