/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் காட்டு யானை பிரச்னைக்கு தீர்வு வேண்டும்: மக்கள் உண்ணாவிரதம்
/
கூடலுாரில் காட்டு யானை பிரச்னைக்கு தீர்வு வேண்டும்: மக்கள் உண்ணாவிரதம்
கூடலுாரில் காட்டு யானை பிரச்னைக்கு தீர்வு வேண்டும்: மக்கள் உண்ணாவிரதம்
கூடலுாரில் காட்டு யானை பிரச்னைக்கு தீர்வு வேண்டும்: மக்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 11, 2024 10:34 PM

கூடலுார் : காட்டு யானை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, கூடலுார் தேவர்சோலை அருகே, மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார் தேவர்சோலை மாணிக்கல்லாடி, அஞ்சுகுன்னு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக, 'கட்டகொம்பன்' என்ற காட்டு யானை, இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து, விவசாய பயிர்கள் சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
அந்த யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், யானை ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை அஞ்சுகுன்னு பகுதியில் நுழைந்த அந்த யானை, மணி என்பவரின் ஆட்டோவை சேதப்படுத்தியது.
அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், காட்டு யானை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, நேற்று காலை, 7:00 மணி முதல், அஞ்சுக்குன்னு பகுதியில், ஆட்டோவை நிறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, டிஎஸ்பி வசந்த்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்,
'கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, காட்டு யானையை விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். எனினும், மாலை வரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'யானை விரட்டுவதற்கான நடவடிக்கையை உடனடியாக துவங்க வேண்டும்.
இல்லையெனில் நாளை முதல் (இன்று), வீட்டில் ஒருவர், வீட்டின் அருகே அமர்ந்து உண்ணாவிரதத்தை போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.