/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலக சிக்கிள் செல் தினம் அனுசரிப்பு மருத்துவ கல்லுாரி மாணவியர் பேரணி
/
உலக சிக்கிள் செல் தினம் அனுசரிப்பு மருத்துவ கல்லுாரி மாணவியர் பேரணி
உலக சிக்கிள் செல் தினம் அனுசரிப்பு மருத்துவ கல்லுாரி மாணவியர் பேரணி
உலக சிக்கிள் செல் தினம் அனுசரிப்பு மருத்துவ கல்லுாரி மாணவியர் பேரணி
ADDED : ஜூன் 29, 2024 02:02 AM

ஊட்டி:உலக அரிவாள் செல் (சிக்கலில் செல் அனீமியா) ரத்த சோகை தினம், ஆண்டுதோறும் ஜூன், 19ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த நோயை வென்று வாழ்வை மாற்ற எதுவாக, ஊட்டியில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு மருத்துவக் கல்லுாரி டீன் கீதாஞ்சலி பேரணியை துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலுசாமி, கண்காணிப்பாளர் உமா, பேராசிரியர்கள் டாக்டர் கல்யாணி மற்றும் டாக்டர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி முடிவில் மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:
அரிவாள் செல் ரத்த சோகை, மரபணு மாற்றத்தால் வரும் ஒருவகை ரத்த கோளாறு. ஒவ்வொரு பெற்றோரிடம் இருந்தும், இரண்டு அசாதாரண நகல்களை ஒருவர் பெரும் போது, இந்நோய் ஏற்படுகிறது. ஒரு அசாதாரண நகலை மட்டும் கொண்ட நபருக்கு, அறிகுறிகள் ஏதும் இருக்காது.
பொதுவாக, 5 முதல் 6 மாத வயதில் அறிகுறி தொடங்கும். மன அழுத்தம், நீரிழப்பு, அதிக உயரம் ஆகிய காரணிகளால், நோயின் வீரியம் அதிகரிக்கும்.
சோர்வு, மூச்சு திணறல், மூட்டு வலி, கைக்கால் வீக்கம், பக்கவாதம் மற்றும் மஞ்சள் காமாலை போன்றவை இந்நோயின் அறிகுறிகள். இந்நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாக இருக்கும்.
அரிவாள் செல் நெருக்கடி, ஒரு அபாயகரமான நிலையாகும். பல நேரங்களில், இந்த நெருக்கடியில் மோசமான நுரையீரல் தொற்று மற்றும் மண்ணீரல் செயலிழப்பு ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நோயை உயர் செயல் திறன் கொண்ட திரவ 'குரோமட்டோகிராபி' என்ற சோதனை மூலம் கண்டறியலாம். நோயின் கேரியர்கள் மற்றும் அரிவாள் செல் அனிமியா உள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு இந்நோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய, அவர்களை மரபணு ஆலோசனைக்கு உட்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் ஆம்னியாட்டிக் திரவத்தில் மாதிரியில் மரபணு சோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தைக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.