/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் ஆட்டோ மீது போலீஸ் பஸ் மோதி விபத்து
/
பந்தலுாரில் ஆட்டோ மீது போலீஸ் பஸ் மோதி விபத்து
ADDED : ஜூன் 29, 2024 02:01 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே ஆட்டோ மீது போலீஸ் பஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரை, மாநில எல்லை சோதனை சாவடிகளில் பணியில் அமர்த்தவும், சோதனை சாவடிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரை ஊட்டிக்கு அழைத்து செல்லவும் நேற்று போலீஸ் பஸ் வந்துள்ளது. தாளூர் சோதனை சாவடியில் போலீசை இறக்கிவிட்டு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை போலீஸ் ராஜன் ஓட்டியுள்ளார்.
அய்யன்கொல்லி மூலக்கடை என்ற இடத்தில் வந்த போது, அய்யன்கொல்லியில் இருந்து, பூதமூலா நோக்கி சென்ற ஆட்டோ மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. அதில், ஆட்டோவில் பயணம் செய்த மயில்விழி,54, என்பவர் பலத்த காயமடைந்தார்.
அவர் பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து முதலுதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்காக, கேரளா மாநிலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.