/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை ஏலம்: விலை தொடர் ஏற்றம் ரூ. 10.58 கோடி மொத்த வருமானம் ரூ. 10.58 கோடி மொத்த வருமானம்

ADDED : ஜூன் 10, 2024 01:33 AM

குன்னுார்:நீலகிரியில் தேயிலை ஏலத்தில் தொடர்ந்து சராசரி விலை உயர்ந்து வரும் நிலையில் கிலோவுக்கு, 115 ரூபாய் கிடைத்துள்ளது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 23வது ஏலத்தில், '7.11 லட்சம் கிலோ இலை ரகம்; 2.66 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 9.77 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
'6.69 லட்சம் கிலோ இலை ரகம், 2.49 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 9.18 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 10.58 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
தொடர்ந்து, இரு வாரங்களாக சராசரி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு, 115.30 ரூபாயாக இருந்தது. ஒரே வாரத்தில் கிலோவுக்கு, 4 ரூபாய் வரை ஏற்றம் கண்டது.
கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில் தேயிலை துாள் வரத்து அதிகரித்தது. 93.91 சதவீதம் தேயிலை துாள் விற்றது. 2 வாரங்களாக டஸ்ட் இலை ரக தேயிலை துாள் ஸ்லாட்கள் கிலோ, 110 ரூபாய்க்கு மேல் விலை கிடைத்துள்ளது. டீசர்வ் ஏலத்தில் சராசரி விலை கிலோவுக்கு, 104 ரூபாய் கிடைத்துள்ளது.