/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெயின் சமூகத்தினரின் 'உப்தியான்' ஊர்வலம் :48 நாட்கள் துறவற வாழ்க்கை

ADDED : ஜூன் 10, 2024 01:32 AM

குன்னுார்:குன்னுாரில் துறவறம் கடை பிடித்த ஜெயின் சமுதாய மக்களின் 'உப்தியான்' ஊர்வலம் நடந்தது.
ஜெயின் சமுதாயத்தில் பலரும் துறவற வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ஈடுபடும் துறவிகள் போன்றே ஜெயின் சமுதாய மக்கள் பலரும் தங்கள் வாழ்நாளில், 48 நாட்கள் உப்தியான் எனப்படும் துறவறம் கற்றல் முறைகளை பின்பற்றி விரதம் இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, குன்னுாரில் உள்ள ஜெயின் கோவிலில் நடந்த உப்தியான் நிகழ்ச்சியில் நாடு முழுவதிலிருந்தும் வந்த பலர், உப்தியான் எனப்படும் கற்றல் முறையை பயின்று விரதம் இருந்தனர்.
நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றான, 47 வது நாள் ஊர்வலம் குன்னுார் புளு ஹில்ஸ் பகுதியில் துவங்கி மவுண்ட் ரோடு வழியாக ஜெயின் கோவிலை அடைந்தது.ஜெயின் சமூகத்தின் குரு ஆச்சாரியர் ஜுகோதே பிரபு தலைமையில், செண்டை மேளம் முழங்க, கதகளி நடனத்துடன், 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஜெயின் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் பஜனை அன்னதானம் ஆகியவை நடந்தது. ஏற்பாடுகளை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெனாலி என்பவர் அனைத்து செலவுகளையும் ஏற்று நடத்தி வைத்தார்.