/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா வேன் மோதி அடுத்தடுத்து விபத்து மூன்று வாகனங்கள் சேதம்: இருவர் காயம்
/
சுற்றுலா வேன் மோதி அடுத்தடுத்து விபத்து மூன்று வாகனங்கள் சேதம்: இருவர் காயம்
சுற்றுலா வேன் மோதி அடுத்தடுத்து விபத்து மூன்று வாகனங்கள் சேதம்: இருவர் காயம்
சுற்றுலா வேன் மோதி அடுத்தடுத்து விபத்து மூன்று வாகனங்கள் சேதம்: இருவர் காயம்
ADDED : ஜூன் 10, 2024 12:23 AM

ஊட்டி;ஊட்டி ரோஜா பூங்கா சாலையில் வந்த சுற்றுலா வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, எட்டினஸ் சாலையில் ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, 14 சுற்றுலா பயணிகள் வேனை வாடகைக்கு எடுத்து ஊட்டியை சுற்றி பார்க்க வந்துள்ளனர். நேற்று காலை ரோஜா பூங்காவை கண்டு ரசித்து விட்டு படகு இல்லம் நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது, ரோஜா பூங்கா சந்திப்பு சாலையில் வேன் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, எட்டினஸ் சாலையில் ஆட்டோ ஸ்டாண்டில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதி, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேன் மோதிய வேகத்தில் ஆட்டோக்களும் பள்ளத்தில் கவிழ்ந்தன.
அங்கு வந்த, ஊட்டி பி1 இன்ஸ்பெக்டர் முரளிதரன், போக்குவரத்து எஸ்.ஐ., வின்சென்ட் மற்றும் போலீசார் வந்த வேனில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் காயமடைந்த, 2 ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவரை ஆகிய மூன்று பேரை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். சம்பவம் நடந்த போது அதிர்ஷ்டவசமாக சாலையில் இருசக்கர வாகனம், பாதசாரிகள் யாரும் நடந்து செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் எட்டினஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.