/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழிவின் விளிம்பில் கழுதைப் புலி: பாதுகாக்க சிறப்பு திட்டம் அவசியம்
/
அழிவின் விளிம்பில் கழுதைப் புலி: பாதுகாக்க சிறப்பு திட்டம் அவசியம்
அழிவின் விளிம்பில் கழுதைப் புலி: பாதுகாக்க சிறப்பு திட்டம் அவசியம்
அழிவின் விளிம்பில் கழுதைப் புலி: பாதுகாக்க சிறப்பு திட்டம் அவசியம்
ADDED : அக் 20, 2025 11:25 PM

கூடலூர்: முதுமலை, மசினகுடி பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள கழுதைப் புலிகளை, சிறப்பு திட்டம் மூலம் பாதுகாக்க வலியுறுத்தி உள்ளனர்.
உலகில் அரிதாகி வரும் வன உயிரினங்கள் பட்டியலில், காடுகளின் துப்புரவு பணியாளர் என்று அழைக்கப்படும் கழுதைப்புலியும் ஒன்று. வனத்தில், மாமிச கழிவுகளை, உண்டு அழித்து நோய்கள் பரவுவதை தடுப்பதில் பங்கு இதன் அளப்பரியது. தற்போது, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி வனக்கோட்டம் சீகூர், தெங்குமரஹடா, சத்தியமங்கலம் அதனை ஒட்டிய கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம் பகுதிகளில் மிக அரிதாகவே காணப்படுகிறது. மாயார் பகுதியில், இவைகள் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமான விவரம் வெளியிடப்படவில்லை. எனவே, இவைகளை பாதுகாக்க அரசு சிறப்பு திட்டங்களை கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மசினகுடி, சீகூர் பகுதியில் காணப்படும் இதனை ஒரு சில வன ஊழியர்கள் அபூர்வமாக நேரில் பார்த்துள்ளனர். இப்பகுதியில் இதனை பாதுகாக்க, கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம்' என்றனர்.
ஓய்வு பெற்ற வன கால்நடை டாக்டர் அசோகன் கூறுகையில், 'அழிவின் பட்டியலில் உள்ள கழுதைப் புலிகள் தமிழகத்தில் முதுமலை மாயார் பள்ளத்தாக்கு பகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கை இவை காணப்படுகிறது.
'வனப்பகுதியில் இறைச்சி கழிவுகளை உண்டு, வனத்தை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. எனவே, இவைகளை, பாதுகாக்க அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்றார்.

