/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின மக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
/
பழங்குடியின மக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
ADDED : அக் 20, 2025 11:25 PM

பந்தலூர்: பந்தலூர் அருகே கூவமூலா, மற்றும் பத்தாம் நம்பர் பழங்குடியின கிராமங்களில் சக்தி நீலகிரி அறக்கட்டளை சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்றார்.
சமூக ஆர்வலர் காளிமுத்து தீபாவளி கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்று, தீபாவளியை கொண்டாடுவதன் அவசியம் மற்றும், பண்டிகை காலங்களில் உறவுகள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஏற்படும் புரிதல்கள் குறித்து பேசியதுடன், அறக்கட்டளை சார்பில் பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் சிறுவர்களுக்கு பட்டாசுகள் வழங்கினார்கள். தொடர்ந்து கிராமத்தில் பட்டாசு வெடித்து பழங்குடியின மக்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்,
நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் முரளி, ரவிச்சந்திரன், சதீஷ், தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜேந்திரன் நன்றி கூறினார்.

