/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகன சட்ட திருத்தம் :கண்டன ஆர்ப்பாட்டம்
/
வாகன சட்ட திருத்தம் :கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 26, 2024 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, குன்னுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குன்னுாரில், தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பு பொறுப்பாளர் வினோத் குமார் தலைமை வகித்தார். அதில், வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குன்னுார் சுற்றுப்புறமுள்ள லாரி, டூரிஸ்ட் வேன், டாக்சி, ஆட்டோ மற்றும் கூட்ஸ் ஆட்டோ, 'பிக்--அப்' டிரைவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

