ADDED : ஜூலை 12, 2024 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை,:தொண்டி கிழக்கு கடற்கரை ரோட்டில் லாரியில் கடத்தப்பட்ட 3000 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கிழக்கு கடற்கரை ரோட்டில் எஸ்.பி.பட்டினம் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். மாலை 6:30 மணிக்கு புல்லுார் அருகே சென்ற மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ கொண்ட 60 மூடைகளை கொண்ட 3000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் காரைக்குடி புதுவயலை சேர்ந்த சிவசாமியை 50, கைது செய்தனர்.
தப்பி ஓடிய லாரி உரிமையாளர் காரைக்குடி புதுவயல் பாண்டி 45, அவரது உதவியாளர் கார்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.