/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய பாலத்தில் அக்டோபரில் ரயிலின் சோதனை ஓட்டம் வாரிய உறுப்பினர் தகவல்

ADDED : ஜூலை 12, 2024 12:44 AM

ராமேஸ்வரம்:''பாம்பன் புதிய பாலத்தில், அக்டோபரில் ரயில் பெட்டி சோதனை ஓட்டம் நடக்கும்,'' என, ரயில்வே வாரிய உறுப்பினர் அனில்குமார் கண்டேல்வால் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் அருகே, பாம்பன் கடலில் 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் கட்டுமானம் மற்றும் ராமேஸ்வரத்தில் 120 கோடி ரூபாயில் ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு பணி நடக்கிறது. இப்பணியை நேற்று ரயில்வே வாரிய உறுப்பினர் அனில்குமார் கண்டேல்வால் ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், ''புதிய பாலம் கட்டு மானப் பணி இரண்டு மாதங்களில் முடியும். அக்டோபரில் புதிய பாலத்தில் ரயில் பெட்டி சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
''அதன்பின், ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கப்படும். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணியும் டிசம்பரில் முடிவடைய வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
இங்கு, 2.1 கி.மீ., பாம்பன் புதிய பாலத்தில், 1.6 கி.மீ.,க்கு 100 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
இந்த பாலத்தில் நேற்று மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட, 2.64 லட்சம் கிலோ எடையுள்ள இரு ரயில் இன்ஜின்கள் மூன்று முறை சோதனை ஓட்டம் நடத்தி, புதிய பாலத்தின் உறுதித் தன்மையை ரயில்வே வாரிய உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.