/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் போராட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் போராட்டம்
ADDED : ஜூலை 11, 2024 05:03 AM

ராமநாதபுரம்: குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் சம்பளம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் நவநீதன், பொருளாளர் சாந்தி, துணைத்தலைவர் முனியசாமி, துணை செயலாளர்கள் நவீன்குமார், பவானி, போராட்ட ஒருங்கிணைப்பாளர் தினரகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் என்.கே.ராஜன் பேசினார்.
மாவட்ட கைத்தறி தொழிலாளர் சங்கம் பெருமாள், உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.